சென்னை:கரோனா பாதிப்பு காரணமாக தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவில் மந்த நிலை நிலவுகிறது.
நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், 30 நாட்களுக்கு முன்பே அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியும். கடந்த ஆண்டுகளில், இதே காலகட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து முன்பதிவுகள் நடைபெற்ற நிலையில், தற்போது நான்காயிரம் முன்பதிவுகள் கூட நடைபெறவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தீபாவளியை முன்னிட்டு வழக்கமான பேருந்துகளுடன் மக்களின் தேவையை நிறைவு செய்ய கூடுதலாக நான்காயிரம் முதல் 4,500 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அலுவலர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை.
இது தொடர்பாக பேசிய போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர், “தற்போது கரோனா அச்சம் காரணமாக மக்கள் பயணிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னையில் இருந்து 2,025 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது அவற்றில் 75 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.