சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய பயணச்சீட்டுகளை முன்பதிவு வசதி இன்று(செப்.4) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி பயணிகள் இன்று முதல்http://tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.