சென்னை: ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது, தமிழ்நாடு அரசு.
சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது. மேலும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோரின் பிரச்னைகளை களைவதற்கும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையிலும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.