தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் காவலரிடம் ஆபாசமாகப்பேசி தகராறு - இருவர் கைது! - கேளம்பாக்கம் காவல் சரக உதவி ஆணையரான ரவிக்குமார்

பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசி தகராறில் ஈடுபட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெண் காவலரிடம் ஆபாசமாக பேசி தகறாறு
பெண் காவலரிடம் ஆபாசமாக பேசி தகறாறு - இருவர் கைது

By

Published : Jun 6, 2022, 7:23 PM IST

சென்னை: தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் காவல் சரக உதவி ஆணையரான ரவிக்குமாரின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக, தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாரை பார்த்து கொள்வதற்காக உதவி ஆணையர் ரவி சுழற்சி முறையில் காவலர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. அதன்படி நேற்று உதவி ஆணையரின் தாயாரை பார்த்துக்கொள்ள கானாத்தூர் காவல் நிலைய முதல்நிலை பெண் காவலர் ஒருவரை அனுப்பி உள்ளார். அவர் பணியை முடித்த பின்னர், மாற்றிவிடுவதற்காக வரும் பெண் காவலருக்காக மருத்துவமனைக்கு வெளியே நின்றிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசியதாகத் தெரிகிறது. அந்த நபரின் அச்சுறுத்தலால் பயந்த பெண் காவலர் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.

பின்னர் மாற்றுவதற்காக காவலர் வந்துவிட்டதாக கூறியதால், மீண்டும் கீழே வந்த பெண் காவலரிடம், அதே நபர் ஆபாசமாகப் பேசி உள்ளார். இதனால் கோபமடைந்த பெண் காவலர் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அந்த நபர் தனது நண்பர்களை வரவழைத்து காவலர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்தப்புகாரின் பேரில், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். பெண் காவலரிடம் ஆபாசமாகப்பேசியவர் கலிக்குன்றம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(29) என்பது தெரியவந்தது. அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் குணசேகரன், விக்னேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தாயாரை மருத்துவமனையில் பார்த்து கொள்வதற்காக காவலர்களை பணியமர்த்திய உதவி ஆணையர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'காவலர்' எனக்கூறி காதல் ஜோடியிடம் நகை பறிப்பு - சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details