நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 14) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிப்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. மேலும், பட்டாசு கழிவுகளை அகற்றுவதில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வந்தது.
சென்னையில் 18.67 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி தகவல் - பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை: தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, சென்னையில் இதுவரை 18.67 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நவம்பர் 13ஆம் தேதி தொடங்கி இன்று (நவம்பர் 15) காலை வரை 18.67 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, வட சென்னை பகுதியில் 5.575 டன் பட்டாசு கழிவுகளும், மத்திய சென்னையில் 5.104 டன்னும், தென் சென்னையில் 7.995 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு பட்டாசு கழிவுகள் குறைந்துள்ளது. 2019இல் 22.58 டன்னாக இருந்த பட்டாசு கழிவுகள் இந்த முறை 18.67 டன்னாக உள்ளது.