சென்னை:தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநரான மாவட்ட ஆட்சியர் நாகராஜனின் மனைவி சபிதாராணிக்கு எதிராகச் சோதனை உத்தரவுபெற்ற வருமான வரித் துறையினர், 2016ஆம் ஆண்டு பல்லாவரம் வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 300 ரூபாய் பணமும், சில நகைகளையும் கைப்பற்றினர். இது சம்பந்தமாக வருமான வரித் துறையினர் மதிப்பீடுசெய்த நிலையில், பறிமுதல்செய்த நகை, பணத்துக்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன்தான் பயனாளி எனக்கூறி, பினாமி தடைச் சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பித்தனர்.