தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யார் ஆட்சியில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது: பேரவையில் காரசார விவாதம்! - செந்தில் பாலாஜி

கரோனா தொற்று இருக்கும் சூழலில் மதுக்கடைகள் திறந்தது, யார் ஆட்சியில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது ஆகியவை தொடர்பாக திமுக - அதிமுக இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை, கலைவாணர் அரங்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவை

By

Published : Jun 22, 2021, 7:53 PM IST

Updated : Jun 22, 2021, 8:24 PM IST

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றது.

அப்போது அதிமுக அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவி, "கடந்த ஆட்சியில் கரோனா குறைவாக உள்ளபோது மதுக்கடைகள் திறந்ததற்கு, தற்போதைய முதலமைச்சர் போராட்டம் நடத்தினார். ஆனால் தற்போது கரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில மதுக்கடைகளை ஏன் அரசு திறந்துள்ளது" என கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி விளக்கம்

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தற்போது தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. கரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாரயம், கள்ள சந்தையில் அதிக விலையில் மதுவிற்பனை போன்றவற்றைத் தடுக்கவே மதுக்கடைகள் திறக்கப்பட்டது" என விளக்கமளித்தார்.

அப்போது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கடந்த ஆட்சியில் கரோனா தொற்று குறைவாக இருந்த காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை அதிமுக உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஸ்டாலின் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்குதான் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஜுன் மாதம் ஏழாயிரம் பாதிப்புதான் இருந்தது, இன்று பாதிப்பின் எண்ணிக்கை அன்றைவிட உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

குறுக்கிட்ட எடப்பாடி

இதற்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த மே மாதம் 7ஆம் தேதி 26 ஆயிரமாக இருந்த கரோனா தொற்றின் எண்ணிக்கை, இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது 7 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

முழுமையாக செயல்பட முடியவில்லை

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பிப்ரவர் 26ஆம் தேதி கரோனா பரவல் 451 ஆகத்தான் இருந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியாகி நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதனால் முழுமையாக செயல்பட முடியவில்லை" என்றார்.

விஜயபாஸ்கர் பேட்டி அளித்தாரே?

அப்போது எந்த அலுவலர்களையும் சந்தித்து பேச முடியாத சூழல் இருந்து, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் கூட்டுவதற்கு தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சியின்போது கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது" என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "தேர்தல் அறிவிப்பால் செயல்பட முடியவில்லை என்றால், அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டதும், அதுகுறித்து பேட்டியும் அளித்துள்ளார்" என்றும் சுட்டிகாட்டி பேசினார்.

முற்றுப்புள்ளி வைத்த துரைமுருகன்

இவ்வாறு விவாதம் தொடர்ந்த நிலையில் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "உங்கள் ஆட்சியில் நீங்கள் கரோனாவை கட்டுப்படுத்தியதாகவும், எங்கள் ஆட்சியில் நாங்கள் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்து அமர்ந்தார்.

இதையும் படிங்க: சரத்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம்: திமுக பங்கேற்கவில்லை

Last Updated : Jun 22, 2021, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details