சென்னை: டெய்லர் ரோட்டிலுள்ள தொன்போஸ்கோ அரங்கத்தில் குறும்பர் விடுதலை இயக்கம் மற்றும் JENSEN இணைந்து தயாரித்த "காணாமல் போன கல்லறைகள்" ஆவணப்படத்தை விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.
புறக்கணிப்பில் புதிரை வண்ணார்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிரை வண்ணார்' மக்கள் அனைத்து தரப்பினாலும் புறக்கணிக்கும் சமுதாயமாக உள்ளது. அரசும் அவர்களை பொருட்படுத்தாதநிலையில், அவர்களுக்கு இடுகாடு, கல்லறை வசதி கூட இல்லை என்றார். இந்த சமுதாய மக்கள் எப்பவும் மற்ற சமூகத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய நெருக்கடியுள்ளது. அவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று முழுமையாகக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், அவர்களுக்கு ஜாதி சான்றிதழ், இட ஒதுக்கீடு, மனை பட்டா, உயிர் இழந்த பின்பு அடக்கம் செய்யக் கல்லறை வசதிகள் செய்து தர வேண்டும். இதைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இஸ்லாமியச் சிறைவாசிகள் மீது பாரபட்சம் காட்டுவதாக திருமாவளவன் எம்பி குற்றச்சாட்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படும் போது அவர்கள் செய்த குற்றம், பெறப்பட்ட தண்டனை மட்டும் பார்க்க வேண்டுமே தவிர,மதம் ஒரு அளவுகோலாக இருக்கக் கூடாது என இஸ்லாமியக் கைதிகள் விடுதலை செய்யாதது விமர்சனங்கள் பெற்று வருவது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்தார்.
அரசிடம் பொது இடுகாட்டிற்குக் கோரிக்கை
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த திருமாவளவன், தனி இடுகாடு கூடாது, பொது இடுகாடு வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் நீண்ட நாள் கோரிக்கை. பொது இடுகாடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை எனத் தெரிவித்தார். உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு பின்னாலாவது, பொது இடுகாடு அமைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சாதி, மதம் பெயரால் வேறுபாடுகள் கூடாது என நடனக் கலைஞர் சாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
சேலம் அருகே நடைபெற இருந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சிக்கு நான் பங்கேற்றால் சமூக பதற்றம் ஏற்படும் என இல்லாத ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி காவல்துறை அனுமதி மறுக்கிறது என்ன குற்றம் சாட்டினார். இதே நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், ஜெயலலிதா பங்கேற்றுள்ளனர்; ஆனால் என்னைப் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை? என்று கூறினார்.
பாஜக மாநில தலைவர் காவல்துறை ஒரு கட்சியின் ஏவல் துறை என்று விமர்சனங்கள் வைத்துப் பற்றிய கேள்விக்கு, தன்னிடம் "கருத்து இல்லை" எனப் பதில் கூறினார். முன்னதாக, பாஜக தலைவர் அண்ணாமலை, 'திருமாவளவன் அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது' எனப் பேசியது குறித்த கேள்விக்கு வியாபாரிக் கட்சியான பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, வியாபாரி என்பதால் வியாபாரத்தைப் பற்றித் தெரிவித்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 'அம்பேத்கரை முதலில் முழுமையாகப் படிங்க மிஸ்டர் திருமாவளவன்!'