சென்னை:சென்னை மாநகராட்சியில் 2,071 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் கால்வாய்கள் உள்ள நிலையில், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் இவற்றில் பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழை நாட்களில் மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகின்றது.
இதுபோன்ற இணைப்புகளை துண்டித்து அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சியின் உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் குழாய் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் சாதாரணக் கட்டடங்களில், குடியிருப்புகளுக்கு ரூ.5,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.10,000/-மும், சிறப்பு கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.25,000/மும், வணிக வளாகங்களுக்கு ரூ.50,000/-மும், அடுக்குமாடி கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.1,00,000/-மும், வணிக வளாகங்களுக்கு ரூ.200,000/-ம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.