தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் பள்ளிகள் இயக்குனரகம் புதிதாக தோற்றுவிப்பு - Directorate of Private Schools

தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்காக அதனை புதிதாக தோற்றுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் இயக்குனரகம் புதிதாக தோற்றுவிப்பு
தனியார் பள்ளிகள் இயக்குனரகம் புதிதாக தோற்றுவிப்பு

By

Published : Sep 16, 2022, 10:21 PM IST

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்கு மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ‌

பள்ளிக்கல்வித் துறையில் ஏற்கெனவே தொடக்கக் கல்வித் துறைக்கு என மாவட்ட கல்வி அலுவலரும், பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலருக்கு அடுத்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் செயல்பட்டு வந்தன.

அந்தப் பணியிடங்களை மீண்டும் தோற்றுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறையில் அமலில் இருந்த நிர்வாக பணியிடங்கள் மாற்றப்பட்டு அரசாணை 101 108 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது அதில் 101 அரசாணை ரத்து செய்யப்பட்டு புதிய அரசாணை 151 வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக்கல்வித்துறையில்
நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை 151 வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ,ஐ சிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளையும் நிர்வகிக் தனியார் பள்ளி இயக்குனரகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பள்ளிகள், நர்சரி பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள், ICSE பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் இனி தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ். கொண்டுவரப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தனியார் பள்ளிகள் இயக்குனராகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொடக்கப் பள்ளிகளுக்கு என மாவட்ட கல்வி அலுவலர் பதவியிடம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

அவர் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் என்று அழைக்கப்படுவார். மேலும் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டந் தோறும் தனியார் பள்ளிகளை கண்காணிக்க தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பதவியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யப்போரினால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details