தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2021, 3:07 PM IST

Updated : Nov 19, 2021, 3:59 PM IST

ETV Bharat / city

மருத்துவர்கள் பாலியல் வழக்கு: மருத்துவ இயக்குநரகத்தின் அதிரடி முடிவு!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ இயக்குநரகத்தின் அதிரடி முடிவு
மருத்துவ இயக்குநரகத்தின் அதிரடி முடிவு

சென்னை:மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்களுக்கு பாலியல் சீண்டல்களை கொடுத்த, இரண்டு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு, பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏதேனும் உள்ளதா என மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் முதல்வர்களும், இயக்குநர்களும் நேரடியாக சென்று, தனித்தனியாக விசாரிக்க வேண்டும்.

இதனையடுத்து, மருத்துவர்களிடம் இருந்து ஏதேனும் புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கரோனா பணிக்காக தனியார் விடுதிகளில் தங்கியுள்ள பெண் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்கள் வாபஸ்: 'பிரதமருக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது'

Last Updated : Nov 19, 2021, 3:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details