தேசிய திறனாய்வுத் தேர்வில் தகுதிபெறும் மாணவர்களுக்கு 11,12 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடித்தில், ” பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், இத்தேர்விற்கு ’www.dge.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப்படிவங்களை பெறலாம். இவ்விவரத்தினை அனைத்து உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், சிபிஎஸ்இ மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
மாணவர்களின் விவரங்கள் சரிதானா என்பதை பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஓபிசி (நான் கிரிமிலேயர்), எஸ்சி, எஸ்டி, இடபிள்யூஎஸ் மாணவர்களின் சான்றிதழ்களின் நகலினை பெற்று இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.