தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு தேர்வுத்துறை இயக்குநருக்கு கரோனா! - அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: அரசு தேர்வுகள் துறை இயக்குநருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

By

Published : Jun 9, 2020, 3:23 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் ஒருவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருடன் பணியாற்றுவோருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அங்கு பணிபுரிந்து வந்த தட்டச்சர் மற்றும் அலுவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், அங்கு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கும், பெண் அலுவலர் ஒருவருக்கும் பரிசோதனையில் கரோனா கண்டறியப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்த தேர்வுத்துறை இயக்குநருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கான பணியில் இருந்த தேர்வுகள் இயக்ககத்தின் முக்கிய அலுவலர்கள் பலருக்கும், கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனை காலி படுக்கை விவரம்: இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details