தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதிப்பு : ஒரு மாத விடுப்பில் சென்ற தேர்வுத்துறை இயக்குநர்! - அரசு தேர்வுகள் துறை

சென்னை : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் ஒரு மாத காலம் விடுப்பு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

director
director

By

Published : Jun 11, 2020, 1:01 PM IST

அரசு தேர்வுகள் துறையில் உதவி இயக்குநர், இணை இயக்குநர், தட்டச்சர் என பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்துறையின் இயக்குநரும் இறுதியில் கரோனா தொற்றுக்கு ஆளாகி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரை அவர் விடுப்பு எடுத்துள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்வுத் துறையில் பல்வேறு பணிகள் இருப்பதன் காரணமாக, தேர்வுத் துறை இயக்குநர் பதவி, கூடுதல் பொறுப்பாக வேறொரு இயக்குநரிடம் இன்னும் ஓரிரு நாளில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details