தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜூன் 09இல் விக்னேஷ்சிவன் - நயன்தாரா திருமணம்? - விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணம் எப்போது

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணம் வரும் ஜூன்9-ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா திருமணம்
நயன்தாரா திருமணம்

By

Published : May 7, 2022, 10:19 AM IST

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா உள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சிம்புவை வைத்து ”போடா போடி” படத்தின் மூலம் இயக்குநரானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்து கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் விக்னேஷ்சிவனும், நயன்தாராவும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் ஒன்றாக வலம்வரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின்றன. இருவரது திருமணமும் இந்த ஆண்டு நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 9-ஆம் தேதி இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று(மே.07) திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இருவரும் திருமணத்திற்காக ஏற்பாடுகளை பார்வையிட்டுள்ளனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'நாம பேசாம அரசியலுக்கு போயிருவோமா..?' : SK கலாய்க்கும் 'டான்’ ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details