சென்னை கமலாலயத்தில் பாஜக அறிவுசார் பிரிவு சார்பில் "விநாயகரும் விருட்சமும்" என்னும் தலைப்பில் நேற்று (ஆக.21) விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வில் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் அவர்களுக்கு முருகன் விநாயகர் சிலைகளை வழங்கினார். அவருடன் பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் அர்ஜுன மூர்த்தி, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதையடுத்து மற்றொரு நிகழ்வில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான தருண்கோபி பாஜகவில் இணைந்தார்.