தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாழ்வுதந்தவரிடம் ஆசிபெற்ற இயக்குநர் ஷங்கர்! - இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவில் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம், இயக்குநர் ஷங்கர் தனது மனைவியுடன் சென்று ஆசிபெற்றார்.

சங்கர்
சென்னை

By

Published : Mar 30, 2022, 3:12 PM IST

சென்னை: இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக அறியப்படுபவர், ஷங்கர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக திருமண வரவேற்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். அந்த வரிசையில், ஜென்டில்மேன் படத்தின் மூலம் தன்னை தமிழ்த்திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை நேரில் சந்தித்த இயக்குநர் சங்கர், தனது மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார். அப்போது ஷங்கரும், அவரது மனைவியும் கே.டி.குஞ்சுமோனிடம் ஆசி பெற்றனர்.

இதையும் படிங்க: கிடைக்குமா ஜாமீன்.. ஏக்கத்தில் நடிகை மீரா மிதுன்!

ABOUT THE AUTHOR

...view details