சென்னை: காந்தாரா திரைப்படத்தின் இயக்குநரும், காநாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நேற்று (அக்.15) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், படத்தில் வரும் 'ஓ' என்ற சத்தம் எந்த ஒரு மொழி பெயர்ப்புகளிலும் சிறப்பாக அமையவில்லை. ஆகவே, அதை நான் டப் செய்த கன்னட மொழியிலிருந்து வைக்கப்பட்டது. அதேபோல், அதை ரீலாகவோ அல்லது மறுபடியும் ஒரு முறை பண்ண சொல்லி ஈடுபட வேண்டாம். ஒரு சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் அமையக்கூடாது.
படத்தில் எருமைகளை வைத்து பந்தயம் நடத்தப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் போது ப்ளூ கிராஸ் போன்ற பிரச்சினைகள் வரும். அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அது நம்முடைய உணர்வுகள், நம்ம கலாச்சாரம் அதை எங்கும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது. மாடு, எருமைகளை வீட்டில் வைத்து விட்டு தேவைப்படும்போது மட்டும் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் ரஜினி, மற்றும் கமல் ஹாசன் இருவரின் ரசிகன். அஜித் விஜய் ஆகியோரையும் பிடிக்கும்.