"தங்க மீன்கள்", "பேரன்பு" உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். இவர் தற்போது, மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில், நடிகை அஞ்சலி, நடிகர் சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் தொடங்கியது. அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றுவந்தது.