தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’பெண் வன்கொடுமைக்கு பெண்களே காரணமாக உள்ளனர்’ - இயக்குனர் பேரரசு - perarasu speech in trailer launch function

பெண் வன்கொடுமைக்கு பெண்களே காரணமாக உள்ளனர் என ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்னும் புதிய படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசியுள்ளார்.

பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்னும் புதிய படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா
பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்னும் புதிய படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா

By

Published : Jan 4, 2022, 11:23 AM IST

சென்னை: வரதராஜ் தயாரித்து இயக்கியுள்ள ‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாக ராஜ்கமல் நடித்துள்ளார். இவ்விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது இயக்குனர் பேரரசு பேசுகையில், “சமீபகாலங்களில் பெண் வன்கொடுமைக்கு பெண்களே காரணமாக உள்ளனர். இதனை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் இருந்து பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தாய், தந்தைக்கு பிறகு நாம் மிகவும் மதிக்கும் ஆசிரியர்களே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும். சாதாரண தண்டனைகள் அளித்தால் குற்றங்கள் குறையவே குறையாது. கடுமையான தண்டனையே இதுபோன்ற குற்றங்களுக்கு தீர்வாகும்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: தம்பி ராமையா மீது தயாரிப்பாளர் சரவணன் புகார்

ABOUT THE AUTHOR

...view details