பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவற்றின் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
’பள்ளி திறந்த முதல் நாளிலே இரண்டாம் பருவ பாடப்புத்தகம் வழங்க வேண்டும்’ - director of school education
சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலே பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
direcorate of scholl education
எனவே அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வரும் 30ஆம் தேதிக்குள் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும். காலாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கிட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.