சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை நேரில் சந்தித்து இயக்குநர் கௌதமன் கோரிக்கை மனு அளித்தார்.
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்க..! இல்லைனா பெரும் போராட்டம் வெடிக்கும்..! - இல்லைனா பெரும் போராட்டம் வெடிக்கும்
சென்னை: புதிய கல்விக் கொள்கையை உடனடியாக ரத்து செய்யவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என இயக்குநர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் கௌதமன்
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, “நீட் தேர்வினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர். எனவே நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்தி திணிப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை விடுத்தார். மேலும் இதனைக் கொண்டுவர மாட்டோம் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.