தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலா. 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகளை விடுத்து சொல்லப்படாத மனிதர்களின் கதையை அடித்தளமாக வைத்து திரைப்படத்தை இயக்கியவர்.
பாலா இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான். தற்போது மீண்டும் பாலா - சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது.
'நந்தா', 'பிதாமகன்' படங்களுக்குப் பிறகு பாலா - சூர்யா கூட்டணி இணைந்திருப்பதால் படத்துக்கு ஏற்கெனவே பல எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்ச்.05) இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள். இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி