தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.! - சென்னை சக்தி மகளிர் விடுதி

சென்னை: சினிமா திரைப்பட இயக்குனர் பி.வாசு, பெண் மீது சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Director B. Vasu complains against the woman
Director B. Vasu complains against the woman

By

Published : Dec 2, 2019, 4:40 PM IST

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6ஆவது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி, சக்தி என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். வாடகையாக மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் ஜானகி கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ஜானகி பாக்கி வைத்துள்ளார். அதனை கேட்டால் திருப்பி தர மறுப்பதாகவும், வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் பி.வாசு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கோடம்பாக்கம் காவல் துறை ஆய்வாளர் பழனி விசாரணை மேற்கொண்டபோது சக்தி மகளிர் விடுதி நடத்தக்கூடிய ஜானகி முறையாக விடுதிக்கான அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று வாசுவிடம் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக வாடகை தராமல் ஏமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சதுரங்க வேட்டை படப்பாணியில் 100 கோடி பணமோசடி..!

ABOUT THE AUTHOR

...view details