சென்னை:தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் வரவு செலவுகளை வெளியாள்களை வைத்து தணிக்கை செய்ய சட்ட விதிகள் அனுமதிப்பதாக தெரிவித்தார்.