தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு - Tamilnadu govt

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐடிஐ கல்வி நிறுவனங்களில் வெல்டிங், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிற்கல்வி வகுப்புகளை தொடங்க கோரிய மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jul 16, 2021, 2:29 PM IST

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம் 16 மாவட்டங்களில் கூட்டுறவு பட்டய பயிற்சியும், ஒன்பது மாவட்டங்களில் ஐடிஐ கல்வி நிறுவனங்கள் மூலம் தையல், கணிப்பொறி, எலக்ட்ரீசியன் உள்ளிட்ட தொழிற்கல்வி பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.

இந்த ஐடிஐ கல்வி நிறுவனங்களில், பிட்டர், வெல்டர், மோட்டார் வாகன பழுது நீக்கம், ஏசி மெக்கானிக் பயிற்சி வகுப்புகளை தொடங்க முடிவுசெய்து ரூ. 5 கோடி செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு இந்த தொழில் பயிற்சி வகுப்புகளை தொடங்க முடிவுசெய்து, முதலீடு செய்தபோதும் இதுவரை வகுப்புகளை தொடங்கவில்லை எனக்கூறி பட்டுக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தொழில் பயிற்சி வகுப்புகள் தொடங்காததால் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் இந்த வகுப்புகளை தொடங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: '12ஆம் வகுப்பு தேர்வு முடிவு 19ஆம் தேதி வெளியாகிறது?'

ABOUT THE AUTHOR

...view details