சென்னை: கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் நடத்திட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபெட்டோ (IBETO) அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சருடைய செயல்பாடுகள் அனைத்து தரப்பினராலும் நெகிழ்ந்து பாராட்டும் வகையில் அன்றாடம் நடைபெற்று வருவதைக்கண்டு மகிழ்ந்து வருகிறோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனம் தேவை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மிகவும் ஆர்வம் உள்ளவர். ஓய்வறியாது செயல்படக் கூடியவர், முற்றிலும் வெளிப்படைத்தன்மை உடையவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனாலும், சில அலுவலர்கள் அன்றாடம் ஆசிரியர் விரோதச் செயல்பாடுகளில் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பார்வைக்குப் பலமுறை கொண்டு வந்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
உயர் நிலைப் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே தொடக்கக்கல்வித்துறையில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும், கற்பித்தல் பணியினை, பள்ளிச்சூழலினை அவர்களுக்கு மலரச் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், சுகாதாரத்துறை எடுத்த முடிவுதான் இறுதியாகப் போனது என்பதை உணர்கிறோம்.
ஆசிரியர்கள் நலனில் அக்கறை வேண்டும்
கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.