சென்னை:இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது.
இதில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதி. இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி திண்டுக்கல், மதுரையில் படித்து வருகின்றனர்.
எனவே, வத்தலகுண்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடம் இருப்பதை கருத்தில் கொண்டு அங்கு புதிய ஆண்கள் கலைக்கல்லூரி ஏற்படுத்தித் தர அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "இருபாலர் கல்லூரி இருக்கக்கூடிய இடத்தில் பெண்கள் கல்லூரி வேண்டும் என்கின்றனர்.