மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, அரசின் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசின் நிதியுதவி தொடர்பான திட்டங்களில் 25 விழுக்காடு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.