தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோரிக்கைகளுக்காக களம்கண்ட மாற்றுத் திறனாளிகள் கைது: தமிழ்நாட்டில் வலுத்த போராட்டம்! - மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதிலும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதில் களம்கண்ட மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

differently abled protest
differently abled protest

By

Published : Dec 2, 2020, 7:01 PM IST

சென்னை:மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மாவட்டம் வாரியாக நடத்திய போராட்டம் குறித்து காணலாம்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகை அருகே மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உதவித்தொகை மூன்றாயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் மாற்றுத் திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

தற்போதுவரை மாற்றுத் திறனாளிகளுக்காக உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருந்த நிலையில், புதுச்சேரி, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மூன்றாயிரமாக வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். போராட்டத்தின்போது சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தபோது மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் தடுத்து கைதுசெய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மதுராந்தகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை, காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

விழுப்புரம்

தங்களின் வாழ்வாதாரம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநிலத் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் நாகர்கோவிலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 10 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கன்னியாகுமரி மாற்றுத் திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

வேலூர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இன்று (டிச. 02) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூரில் மாற்றுத் திறனாளிகளின் சாலை மறியல் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details