சென்னை: திருவேற்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர்(22), இவரது நண்பர் பரத்குமார்(20), இருவரும் நேற்று இரவு திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு உள்ளனர். உணவு சாப்பிட்டு வீட்டிற்கு செல்லும் போது இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருவேற்காடு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதில்,திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட தங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உணவக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.