சென்னை: 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில், தவறான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியையின் மூன்று மாத கால ஊதியத்தை நிறுத்தி தர்மபுரி மாவட்ட பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஜெயஸ்ரீ என்கிற மாணவிக்கு ஆங்கில ஆசிரியை வளர்மதி 82 மதிப்பெண்களுக்கு பதில் 32 மதிப்பெண்கள் வழங்கியதால், ஆசிரியையின் தவறுக்கு தண்டனை அளிக்கும் விதமாக அவரது மூன்று மாத ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக விடைத்தாள்கள் திருத்தும்போது தவறிழைக்கும் ஆசிரியர்களை அடுத்த முறை மதிப்பீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், அல்லது வேறு நடவடிக்கை மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது முதன்முறையாக மூன்று மாத கால ஊதியத்தை நிறுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், பொறுப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஆசிரியருக்கான சம்பள பிடித்தம் தொடர்பான கடிதம் | பக்கம் 1 ஆசிரியருக்கான சம்பள பிடித்தம் தொடர்பான கடிதம் | பக்கம் 2