சென்னை:10 ஆண்டுகளுக்குப் பின் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. கலைப்புலி தாணு தயாரிப்பில், இந்துஜா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.
ட்ரெண்டிங்கில் தனுஷின் “வீரா சூரா” பாடல் - Kalaipili S Thanu
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் இடம் பெறும் வீரா சூரா பாடல் ட்ரெண்டாகி வருகிறது.
Etv Bharat
இதனிடையே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “வீரா சூரா” என்ற பாடல் நேற்று (செப்.07) வெளியாகியது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரெண்டிங்கில் உள்ளது. இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: சர்ப்ரைஸாக வெளியான 'ஜெயிலர்' கொண்டாட்டத்தில் ரசிகர்கள்