தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனுஷின் வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்! - dhanush telugu movie

தனுஷ் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமான வாத்தி படப்பிடிப்பு இன்று (ஜனவரி 7) தொடங்கியது.

dhanush new movie vaathi
தனுஷின் வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்

By

Published : Jan 7, 2022, 1:15 PM IST

சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தனுஷின் பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

மேலும், மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்துள்ள நிலையில், செல்வராகவன் இயக்கியவரும், 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கட் அட்லுரி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

'வாத்தி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

வாத்தி திரைப்படம்

இதனைத்தொடர்ந்து வாத்தி படத்தின் பூஜை ஜனவரி 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ், இயக்குநர் வெங்கட் அட்லுரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடியாகத் தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வலிமை' ரிலீஸ் தள்ளிவைப்பு : பொங்கலுக்கு வெளியாகும் சிறிய படங்கள்

ABOUT THE AUTHOR

...view details