தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பொதுமக்களிடம் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்' - டிஜிபி! - ஊரடங்கு கட்டுபாடுகள்

சென்னை: கரோனா ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.

DGP Tripathi
DGP Tripathi

By

Published : May 9, 2021, 5:23 PM IST

இதுகுறித்து டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வாருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள், பிற அலுவலர்களிடம் பின்பற்ற வேண்டியவை

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காவலர்கள் பொதுமக்களிடம் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்துக்கொள்ளக்கூடாது.

பிற அரசு துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்துவது, பலப்பிரயோகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுப்படக்கூடாது.

வணிகர்கள், வியாபாரிகளை கையாளுதல்

வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிடம் கனிவான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபரத்தை முடித்துக்கொள்ளும்படி கண்ணியமான முறையில் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்தக்கூடாது.

அத்தியாவசிப் பொருள்களின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யவேண்டும்

ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை, காய்கறிகள் ஆயிவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்ய வேண்டும். மருந்துப் பொருள்கள், இதர மருத்துவ உபகரணங்கள் ஆகியவையும் தடையின்றி கொண்டு செல்லப்படுகிறாத என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்சிஸன் கொண்டு செல்லும் வாகனங்களுக்குப் பின் பாதுகாப்பு வானங்கள் செல்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல்

தேவையான அளவு காவலர்களைக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய தினம் 6 மணிக்குள் கடைகள் மூடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக கோவிட் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு மதுபாட்டிகள் வாங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தின் செயல்பாடுகள்

காவல்நிலையத்தில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அடைத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன் அனுமதி பெற வேண்டும். காவல்நிலையத்தின் உள்ளே பொதுமக்களை அனுமதித்தல் கூடாது. அவர்களுக்காக வெளியில் சாமியான அமைத்துக்கொள்ளலாம்.

வாகன பரிசோதனை

ஊரடங்கை மீறுபவர்களின் வாகனத்தைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கில் எந்த வாகனத்தையும் கைப்பற்றக்கூடாது. அப்படியோ கைப்பற்றினாலும் சில மணி நேரத்தில் அவற்றை விடுவித்தல் வேண்டும். அதேபோல கைப்பற்றப்படும் வாகனத்தை காவல்நிலையத்தில் வைத்தல் கூடாது.

பொதுவானவை

ஊரடங்கு காலகட்டத்தில் ஒவ்வொரு காவல்துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு, தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அயராது உழைத்த காவலர்களுக்கு நன்றி: டிஜிபி

ABOUT THE AUTHOR

...view details