சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற தனியார் பள்ளி மாணவி, பள்ளி வளாகத்திற்குள் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அமைதியாக தொடர்ந்த போராட்டம் இன்று மிகவும் தீவிரமடைந்துள்ளது.
மாணவி பயின்ற தனியார் மெட்ரிக் பள்ளி வளாகம் முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. பள்ளியின் பேருந்துகள் உள்ளிட்டவற்றை அங்குள்ள போராட்டக்காரர்கள் டிராக்டர்களால் மோதி சேதப்படுத்தி நெருப்பு வைக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசார், போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியின்போது, படுகாயமடைந்தனர்.
போரட்டக்களமாகிய தனியார் பள்ளி வளாகம் போலீசாரின் வாகனத்திற்கு தீயிட்ட போராட்டக்காரர்கள் தனியார் பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் சின்னசேலம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்திற்குள் சந்தேகத்தேகமான முறையில் உயிரிழந்தது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் செய்த சாலை மறியல் போராட்டம் கலவரமாக மாறிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஜூலை 17) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 18) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 2 காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 350 காவலர்கள் அங்கு உள்ளனர். இருந்தபோதிலும் அங்கு பெரும் கலவரம் நடைபெற்றுள்ளது.
போராட்டக்காரர்கள் போலீசார் வாகனம் ஒன்றை சேதப்படுத்தும் புகைப்படம் போலீசாருக்கும் போரட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு தனியார் பள்ளி பேருந்தை தாக்கும் காட்சி கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு நடைபெற்ற வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கட்ட விசாரணையில் தான் அங்கு என்ன நடைபெற்றது என்று தெரியவரும். அந்த பகுதியில் அதிகமான காவலர்களை இருந்தும் அங்கு இதுபோன்ற கலவரம் நடைபெற்றுள்ளது. மற்ற இடங்களில் இருக்கும் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
டிஜிபி சைலேந்திரபாபு போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை இதையும் படிங்க:பள்ளி விடுதி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை