தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்கள் நிகழ்கால தலைவர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு

மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தின் தலைவர்கள் அல்ல, நிகழ்காலத்தின் தலைவர்கள் என்பதை மனதில் வைத்து செயல்பட்டால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் நிகழ்காலத்தின் தலைவர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு
மாணவர்கள் நிகழ்காலத்தின் தலைவர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு

By

Published : Mar 17, 2022, 2:20 PM IST

சென்னை: எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு தேசிய மாணவர் படை மகளிர் அணி மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து நடத்தும் அமைதி, நல்லிணக்கம் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சென்னை முழுவதும் உள்ள அனைத்து மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை பெண் கேடட்கள் பங்கேற்று கொடுக்கப்பட்ட தலைப்பில் விளக்க காட்சியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, 'பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் தேசிய மாணவர் படையில் தானும் சேர்ந்து பயின்றுள்ளேன். அது அப்போதே தனக்கு தன்னம்பிக்கையையும், தனிமனித ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தது.

டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு

தலைமைப் பண்பை வளர்த்தல், தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தல், மதசார்பற்ற கண்ணோட்டத்தை வளர்த்தல், நற்பண்பை வளர்த்தல், தன்னலமற்ற சேவையை லட்சியமாக கொள்ளுதல் போன்றவைகளே தேசிய மாணவர் படையின் நோக்கம். இவற்றை அனைவரும் கட்டாயம் பின்பற்றினால் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்கள் தங்களின் கடைமைகளைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவிகள் அனைவரும் எதிர்காலத்தின் தலைவர்கள் அல்ல. நிகழ்காலத்தின் தலைவர்கள்' என்றார்.

இதையும் படிங்க: 'தற்கொலை தீர்வல்ல - மாணவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை'

ABOUT THE AUTHOR

...view details