மதுரை:மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் தலைமையில் இன்று (செப்.25) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, தென்மண்டல ஐஜி அன்பு, மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட காவல் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மதுரை டிஐஜி காமினி, திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி, ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகனன் ஆகியோரும்; மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து மற்றும் தலைமையிடம் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் நடந்த கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாக நெல்லையிலும், திண்டுக்கலிலும் நடந்த பழி தீர்க்கும் கொலை சம்பவம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2ஆயிரத்து 512 ரவுடிகளை கைது