சென்னை:நடிகர் சித்தார்த்துக்குச் சென்னை காவல்துறை சம்மன் அனுப்பி இருப்பதாகச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் தொகுப்பாளர் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இழிவாக கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தை நீக்கி மன்னிப்பும் கோரினார்.
காவல்துறை வழக்குப்பதிவு
இந்த நிலையில், நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளதாகக் கூறினார்.