சென்னை:நாளைய தினம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வேப்பேரி தனியார் பள்ளியில் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளரிடம் பேசிய சேகர்பாபு, "வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே வைகுண்ட ஏகாதசி நாளான நாளைய தினம் கட்டுப்பாடுகளுடன் கோயில்களில் வழிபாடுசெய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வருகின்ற 23ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டுள்ள வடபழனி முருகன் கோயில் குடமுழுக்குப் பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே குடமுழுக்கு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு உரிய நடவடிக்கைகள் முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று மேற்கொள்ளப்படும்" என்றார். மேலும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை வைகுண்ட ஏகாதசியில் அனுமதி வழங்கப்படாது என்று திருவல்லிக்கேணி உதவி ஆணையர் கூறியதற்கு, அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: 25th National Youth Festival: தேசிய இளைஞர் விழா: தொடங்கிவைத்த நரேந்திர மோடி!