சென்னை:தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.25) சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை நிலம், காடுகளில் வாழும் வன உயிரினங்களும் ஏரிகள், குளங்கள், ஆறுகள், கடல், கடல் வாழ் உயிரினங்களான ஆமைகள், மீன்கள் உள்ளிட்டவைகளும் உண்ணுகின்றன. பின் அவற்றை மனிதர்களும் உண்ணுகிறார்கள்.
1682 டன் பிளாஸ்டிக் பறிமுதல்:இவ்வாறாகப் படிபடியாகப் பிளாஸ்டிக் நுண் துகள்கள் மனிதர்களின் ரத்தத்தில் கலந்து இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது வேதனையாக உள்ளது. பிளாஸ்டிக்கை ஆரம்ப நிலையிலையே தடுக்க வேண்டும், பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தமாட்டேன் என அவர்களை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு கிட்டதட்ட 1682 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.105 கோடி அபராதமும் விதிக்கப்படுகின்றன.