தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துவருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் பங்கேற்க விரும்புவோர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25ஆம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப். 25ஆம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம். சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்பமனு தாக்கல் செய்யலாம்.
தமிழ்நாடு பொதுத்தொகுதி விருப்பமனுவிற்கு ரூ.15ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.10ஆயிரமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொதுத்தொகுதி விருப்பமனுவிற்கு ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.