சென்னை பெருநகர மாநகராட்சியின் 169ஆவது வார்டில் நேற்று (ஏப்.6) துணை மேயர் மகேஷ் குமார் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் குடிநீர், மழைநீர் வடிகால் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து கோரிக்கைகள் வைத்தனர்.
குடிநீர் பிரச்சினை: இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மகேஷ், "மழைக் காலத்திற்கு முன்னால் மழைநீர் வடிகாலை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குடிநீருடன் கழிவுநீர் கலக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, சுப்புப் பிள்ளை தோட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு இப்பகுதி பொதுமக்களின் ஒப்புதலோடு புதிய கட்டடங்களை கட்டித்தர உள்ளோம்.
வரும் 9ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சென்னை மாநகர மேயர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு - 69 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்..!