தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’இதெல்லாம் எனக்கு அசால்ட்டு...’; மலைப்பாம்பை தூக்கி அசத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்! - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரி : வரவிருக்கும் 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வனக்காப்பகத்தை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அங்கிருந்த மலைப்பாம்பை சற்றும் பயமின்றி தூக்கி சுற்றி இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

மலைப்பாம்பை தூக்கி அசத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
மலைப்பாம்பை தூக்கி அசத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

By

Published : Apr 4, 2021, 4:10 PM IST

புதுச்சேரியில் நடைபெற இருக்கும் 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் வனக்காப்பகத்தை பார்வையிட்ட அவர், சற்றும் பயமின்றி மலைப்பாம்பு ஒன்றை சாதாரணமாக கையில் தூக்கி சுற்றி இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

அதன் பின்பு அங்குள்ள வன விலங்கு, பறவைகள் மாதிரிகளையும் பார்வையிட்டார். வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி வனங்களை ப‌ற்‌றி விரிவாக தமிழிசை சவுந்தராஜனுக்கு எடுத்துக் கூறினார்.

இதையும் படிங்க :பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details