சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் காவல் துணை ஆணையராக இருந்து வந்த சுந்தரவதனத்தின் கார் விபத்துக்குள்ளானது. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் உள்ள அலுவலர்கள் குடியிருப்புக்கு காவலர் சுந்தரராஜ், துணை ஆணையர் சுந்தரவதனத்தின் அரசு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காரில் துணை ஆணையர் இல்லை.
இந்நிலையில் சிவானந்தா சாலையில் கார் திரும்பியபோது, பின்னால் வந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.