தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆவின் விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றம் - etvbharat

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் விஜிலென்ஸ் பிரிவுக்கு துணை ஆணையர் ஜெயலட்சுமி நியமனம்
ஆவின் விஜிலென்ஸ் பிரிவுக்கு துணை ஆணையர் ஜெயலட்சுமி நியமனம்

By

Published : Jul 18, 2021, 12:47 PM IST

Updated : Jul 18, 2021, 1:17 PM IST

சென்னை: ஆவின் நிறுவனம் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 22 ஆவின் நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்திற்கு வந்த புகாரையடுத்து, ரகசிய விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆவின் விஜிலென்ஸ் பிரிவில் ஏற்பட்ட முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க பொறுப்புள்ள அலுவலரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

விஜிலென்ஸ் பிரிவில் ஜெயலட்சுமி

இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) பிரிவில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க ஆவின் நிறுவனத்தின் விஜிலென்ஸ் பிரிவிற்கு அலுவலராக, சென்னை மாநகரக் காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த எச்.ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சென்னை மாநகரக் காவல் துறையில் பணியாற்றியபோது, பல முக்கிய வழக்குகளை கையாண்டவர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்த புகார்கள் இவரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காவல் நிலையங்களுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தங்கம் விலை நிலவரம்'

Last Updated : Jul 18, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details