தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இனி பள்ளிகளில் பணிப்பதிவேடு, பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் பராமரிக்கத்தேவையில்லை - Teachers syllabus

ஆசிரியர்கள் பாடத்திட்டம், பணிப்பதிவேடு உள்ளிட்டவற்றைப் பராமரிக்கத் தேவையில்லை எனவும், பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 24, 2022, 4:53 PM IST

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று (ஆக.24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இதுவரை ஆசிரியர்கள் பராமரித்து வந்த கருவூலப்பதிவேடு, சம்பளப் பிடித்தப் பதிவேடு, நிலுவை சிறப்பு கட்டணப்பதிவேடு உள்ளிட்ட 11 வகையான பதிவேடுகளை பராமரிக்கத்தேவையில்லை. மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை அமல்படுத்துகின்ற ஆசிரியர்கள், பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதும்; வேறு எந்த பதிவேடுகளையும் பராமரிக்கத்தேவையில்லை.

குறிப்பாக, 4 முதல் 12ஆம் வகுப்பு வரையான வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள், பணிப்பதிவேடு மற்றும் பாடத்திட்டப் பதிவேடு ஆகியவற்றைப் பராமரிக்கத்தேவையில்லை. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு வரவேற்கக்கூடியது என்றும் ஆசிரியர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details