சென்னை:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நெருங்கி வந்த நிலையில், தற்போது சென்னைக்கு அருகே கரையை கடக்க தொடங்கியது. ஆந்திரா கடற்பகுதிக்கும் தமிழ்நாடு கடற்பகுதிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முக்கிய எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழ்நாடு கடற்பகுதிக்கும் இடையில் கடந்து செல்லும். இதனால் இயல்பை காட்டிலும் அதீத கனமழை பெய்யும்.