தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக 197 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

By

Published : Oct 29, 2021, 1:43 PM IST

சென்னை:மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா பணியில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து பணிபுரிந்த ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு 196 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்கள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details