சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்கள், கூட்டுறவுத்துறையில் உதவி தணிக்கை இயக்குநர் என 8 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 1இல் 4 பணியிடங்களுக்கு, இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 23, 24 தேதிகளில் தேர்வு நடைபெறும்.